Seed Certification
விதை சேமிப்பு :: அமைப்புகள்
விவசாயிகள் பயன்படுத்தும் விதை சேமிப்பு அமைப்புகள்
சாக்கு பைகள் மண் கட்டமைப்புகள்
  • 35, 50, 75 மற்றும் 100 கிலோ போன்ற கொள்திறன்களில் உள்ளே பிளாஸ்டிக் புறணியுடனும் இல்லாமலும்கிடைக்கும்
  • பெரும்பாலும் குறுகிய கால சேமிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது
  • பொதுவாக விவசாயிகள் விதைகளை பண்ணையில் இருந்து சேமிப்பு தளங்களுக்கு கொண்டுவர சணல் பைகளையே பயன்படுத்துகின்றனர்
  • களிமண், வைக்கோல் மற்றும் மாட்டு சாணத்தை 3: 3: 1 என்ற விகிதத்தில் கலந்து வெயிலில் உலர்ந்தி பின்னர் எரிந்து இந்த மண் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றது. கொள்ளளவு 500 கிலோ - 1000 கிலோ.
  • ஆயுள் 8- 10 ஆண்டுகள். நெல், கோதுமை, சோளம், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளின் சேமிப்புக்கு பயன்படுத்தப்படும்.
  • ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் பிளவுகளால் பூச்சி தொற்று உண்டாகும்
மூங்கில் அமைப்பு மர கட்டமைப்புகள்
  • பிளந்த மூங்கில் தக்கைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிலிண்டர் வடிவ அமைப்பு.கொள்ளளவு 500 கிலோ. நெல், கோதுமை மற்றும் சோளம் விதைகள் சேமிப்புக்கு 4-5 ஆண்டுகள் பயன்படுத்தலாம்
  • பூச்சி தாக்குதல் காரணமாக நெல்லில் 5% மற்றும் சோளத்தில் 15% எடை இழப்பு
  • 1000 கிலோ கொள்ளளவு கொண்டது.நெல் விதை சேமிப்பு பயன்படுத்தப்படுகிறது
  • காற்று புக முடியாது மற்றும் ஈரம் படியாது
  • ஆயுள் 15- 20 ஆண்டுகள்.
அடுத்து
படம் ஆதாரம்: http://www.iskconvarnasrama.com Updated On: Feb, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam